Monday, May 24, 2010

கோவையின் பொழுது போக்கு ... வ.உ.சி பூங்கா.

கடந்த ஞாயிற்றுகிழமை கோவையில் வ.உ.சி பூங்கா சென்றேன். கிளம்பும் போதே குழந்தைகளுக்கு பயங்கர குஷி. பூங்காவில் பயங்கர கூட்டம். கோடை விடுமுறை ஆனதால் மக்களுக்கு வேற எந்த இடமும் இல்லை.

டிக்கெட் கவுன்ட்டரில் அழகாக வரிசையாக மக்கள் சென்றனர்.

உள்ளே சென்றால் ஒவ்வொரு விளையாட்டு இடத்திலும் குழந்தைகள் வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக நின்று விளையாடினார்கள். பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.

குழந்தைகள் விளையாடுவதை பார்ப்பதிலும் ஒரு மகிழ்ச்சி தானே.

நிறைய பெற்றோர்கள் குழந்தைகளை விளையாட விட்டு, ஆங்கங்கே அமர்ந்து நொறுக்கு தீனிகளை காலி பண்ணி கொண்டே குடம்பத்துடன் பேசி கொண்டு இருந்தனர்.

சில தாய் மார்கள் தங்கள் குழந்தைகளுடன் ஓடி பிடித்து விளையாடினார்கள். சிலர் குழந்தைகளை தங்கள் பார்வையில் கவனித்து கொண்டனர்.

என் குழந்தைகள் ஆசையாக விளையாடிய பின்னர் தண்ணீர் தாகம் பொறுக்க முடியாமல் வெளியே வந்தோம். குதிரை சவாரி என் மகனின் வெகு நாள் ஆசை. ஒரு வெள்ளை குதிரையின் மேல் ஏறி ஒரு ரவுண்டு சென்று வந்தான்.

பஞ்சாபி குல்பி ஐஸ் வாங்கி சுவைத்து விட்டு, அருகே இருந்த அவிச்ச கடலையும் வாங்கி சாப்பிட்டு நடக்க ஆரம்பித்தோம்.

எங்கும் மக்கள் கூடம்... கோவை மக்களுக்கு தான் எவ்வளவு குஷி.